

|
தொலை நோக்கு
நவீன சமூக இசைவாக்கத்திற்குப் பயனுடைய நற்பிரஜைகளை உருவாக்கக் கூடிய பாடசாலையாக மிளிர்தல் |
|
குறிக்கோள் மாணவர்கள் விழுமியத்துடன் கூடிய சிறந்த தோ்ச்சி மட்டத்தினைப் பெற்றுக் கொள்வதை அடிப்படையாகக் கொண்டு பாடசாலையை சிறந்த களமாக்கி வாண்மை மிகு ஆசிரிய வளத்தினூடாக வினைத்திறனும் விளைதிறனும் மிக்க முன்மாதிரியான பாடசாலையாக உருவாக்குதலை நோக்காகக் கொண்டு செயற்படல் |
|
பாடசாலைக் கீதம்
வாழிய வாழிய தேவரையாளி வாழ்க நம் இந்துக் கல்லூரி
வற்றாத கல்வி பயில் ஆலயமான வான்புகழ் மாதா வாழ்க அறிவியற் கலையிசை ஓவியம் தொழில்கள் அறியநற் பண்பருள் தாயே
மெய்பொருள் காண்பது அறிவே மேன்மைகொள் சைவம் உயிரே மிகுநலம் பல அருள்வாயே வாழிய மங்கலமான கல்லூரி வாழ்த்தி வணங்குகின்றோமே
அறிவே திருவே அருளே அருள் மறை தருநிதியே அனுதினம் வாழ்த்துகின்றோமே.
ஆக்கம் காரை சுந்தரம்பிள்ளை
|
|
Our Principal Mr M.Navaneethamani எமது கல்லூரி அதிபர் திரு மாரிமுத்து நவநீதமணி B.A , Dip. In. Edu , SLPS – 2.1
|
|
அதிபரின் வாழ்த்து
யா/தேவரையாளி இந்துக் கல்லூரியின் வரலாற்றுப்பாரம்பரியம் தற்போதைய நவீன தொழிநுட்பத்தின் தகவல் பரிமாற்றத்துள் உட்புகுவதையிட்டு மகிழ்சியும் பெருமிதமும் அடைகின்றேன் . நீண்ட கால வரலாற்றின் தொன்மையைக் கொண்ட இக்கல்லூரியின் புகழ் இனி உலகெங்கும் பரவும் வகையில் எமது வலைத்தளம் வடிவமைக்கப்ட்டிருக்கின்றமை மகிழ்ச்சிக்குரியதாகும். என்னுடைய இச்சேவைக்காலத்தில் இம்முயற்சியானது பெரிதும் சவால்கள் நிறைந்த ஒரு முயற்சியாகவே அமைந்து காணப்படுகின்றது ஆரம்ப கட்டமாக எமது பாடசாலையின் வலைத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இது மேலும் சிறப்பாகவடிவமைக்கப்பட்டு கல்லூரி தொடர்பான நிறைந்த தகவல்களைத் தாங்கியதாய் வரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். |


|
பாடசாலைக் கொடி |